அருண் விஜய் இரட்டை வேடத்தில் ஏற்கனவே தடம் படத்தின் மெகா ஹிட் கொடுக்க மீண்டும் இரட்டை வேடத்தில் மான் கராத்தே இயக்குனர் கிரிஷ் திருமுருகன் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள ரெட்ட தல அவருக்கு வெற்றியாக அமைந்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
அருண் விஜய், சிட்தி இருவருமே அப்பா, அம்மா இல்லாமல் பாண்டிசேரியில் வளர்கிறார்கள். அருண் விஜய் பல வருடம் கழித்து வந்து திருமணம் செய்ய வருகிறார். ஆனால், சிட்தி மாடல் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு ஹோட்டலில் வெயிட்டராக உள்ளார்.
அவருக்கு கோடிஸ்வரியாக வாழவேண்டும் என்று ஆசை, அந்த நேரத்தில் அருண் விஜய் தன்னை போலவே இருக்கும் கோடிஸ்வரன் அருண் விஜய் ஒருவரை சந்திக்கிறார். இருவரும் நட்பாகின்றனர்.

அப்போது சிட்தி அவனை கொன்று நீ அந்த இடத்துக்கு போல அவன் பணத்தை நாம் அனுபிவிக்கலாம் என்று ஐடியா கொடுக்க, கோடிஸ்வரன் அருன் விஜய்யை ஏழ்மையில் இருக்கும் அருன் விஜய் காதலி ஆசைகாக கொல்கிறார்.
ஆனால், பிறகு தான் தெரிகிறது, இறந்த அருன் விஜய் பாரோலில் வந்தவர், அவரும் ஒரு பெரிய ஹிட் மேன் என்று, இதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அருன் விஜய் எடுக்கும் அடுத்தடுத்த முடிவுகளே மீதிக்கதை.


சிறை திரைவிமர்சனம்
படத்தை பற்றிய அலசல்
அருண் விஜய் இந்த மாதிரி ரோல் எல்லாம் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல், ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் அடி தூள் கிளப்புகிறார், ஒரு பக்கம் ஹிட்மேன் மற்றொரு பக்கம் காதலிகாக வாழும் அருண் விஜய் என இரண்டு கேரக்டர்களுக்கும் லுக்-ல் வித்தியாசம் இல்லை என்றாலும் ஆட்டிடியூட்-ல் தூள் கிளப்பியுள்ளார்.
நாயகி சிட்தி அருண் விஜய் இந்த நிலைக்கே காரணம் அவர் தான், அவர் கொடுக்கும் ஐடியாக்களில் தான் அருண் விஜய் இந்த நிலைக்கு வருகிறார், காசு-காக அவர் அருண் விஜயை எந்த நிலைக்கெல்லம் தள்ளுகிறார், அதற்கு காதல் என்ற ஆயுதம் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்ற நல்ல கதாபாத்திரம் என்றாலும், என்னமோ அவரை இந்தளவிற்கு சாடிஸ்ட் வில்லிதனமான கேரக்டரில் செட் ஆகவில்லை.

படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே நகர்கிறது, அருண் விஜய் இருவரும் சந்தித்து கொண்ட பிறகு கொஞ்சம் சூடு பிடிக்க, அதன் பிறகு கோடிஸ்வரன் அருண் விஜய் உபேந்திரா மரணம் உபேந்திராவை துரத்தும் டான்-கள் தற்போது இருக்கும் அருண் விஜய்யை குறி வைப்பது என களத்தை நன்றாகவே செட் செய்துள்ளனர், ஆனால், அதற்கான அழுத்தமான காட்சிகள் இல்லை.
வெறும் சண்டை காட்சிகளை நம்பியே தான் திரைக்கதையை நகர்ந்த்தியுள்ளனர், பெரிய பெரிய டுவிஸ்ட் ஓபன் ஆனாலும், காட்சிகள் அழுத்தமில்லாமல் இருப்பது படத்தின் பலவீனமாக உள்ளது.
ஆனாலும் கடைசி 30 நிமிடம் ரசிக்க வைக்கின்றனர். முக்கியமாக கிளைமேக்ஸ்.

அருண் விஜய் தாண்டி வில்லன் கதபாத்திரம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம், டிபிக்கள் மாஃபியா டான் போல் கோட் ஷுட் போட்டுகொண்டு கொல்ல வருவது என பழைய மசாலாவை அரைத்துள்ளனர். ஜான் விஜய் கதாபாத்திரம் வழக்கம் போக் இரிட்டேட் செய்யும் கேரக்டரில் நன்றாகவே செய்துள்ளார்.
டெக்னிக்கலாக ஒளிப்பதிவு சூப்பராகவே உள்ளரு, சாம் சி எஸ் பின்னணி இசை மிரட்டல், படத்தின் காட்சியை நல்ல எலிவேட் செய்துள்ளது.
க்ளாப்ஸ்
அருண் விஜய்
சண்டைக்காட்சிகள், பின்னனி இசை.
கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.
பல்ப்ஸ்
ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள்.
எத்தனை குண்டு பட்டாலும் சண்டை போட்டுகொண்டே இருக்கின்றனர்.
அழுத்தமில்லாத காட்சிகள்.
வில்லன் கதாபாத்திரம்
மொத்தத்தில் ரெட்ட தல கடைசி அரை மணி நேரம் இருந்த விறுவிறுப்பு படம் முழுவதும் இருந்திருந்தால் இதிலும் பெரிய தடம் பதித்திருப்பார்.


