தாய்லாந்து-கம்போடியா இடையேயான மோதலின்போது ஹிந்து கடவுள் சிலை தகா்க்கப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது உலகம் முழுவதும் ஹிந்து மதத்தை பின்பற்றுபவா்களின் உணா்வை காயப்படுத்தும் மோசமான நடவடிக்கை எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
ஹிந்து கடவுள்
“ஹிந்து கடவுள் சிலை தகா்க்கப்பட்ட செய்திகள் கவனத்தில்கொள்ளப்பட்டன.

இந்த சிலை தாய்லாந்து-கம்போடியா மோதலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்தது தெரியவந்தது.
ஹிந்து மற்றும் பௌத்த மதங்களை உலகில் உள்ள பலதரப்பினரும் பின்பற்றி வருகின்றனா்.
அவா்களின் உணா்வுகளை புண்படுத்தும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது.
மோதலை கைவிட்டு அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த இருநாடுகளும் முன்வர வேண்டும் என மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம்.
எல்லைப் பிரச்னை காரணமாக தாய்லாந்து-கம்போடியா இடையே கடந்த ஜூலை மாதம் மோதல் தொடங்கியது.
அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப்பின் தலையீட்டுக்குப் பின் சிறிது காலம் அங்கு அமைதி நிலவிய நிலையில், இந்த மாதம் இருநாடுகளும் மீண்டும் சண்டையிடத் தொடங்கியுள்ளன.
எல்லை பிரச்சினை
இந்நிலையில் கம்போடியாவுடனான எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் தாய்லாந்து இராணுவ வீரர்கள் கம்போடியா பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியமையானது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.
கம்போடியாவின் பிரேவ் விஹார் பகுதியில் விஷ்ணு சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2013ல் தனது பிரதேசமாக தாய்லாந்து கருதும் இந்த இடத்தில் கம்போடிய இராணுவம் 29 அடி உயரத்தில் சிலையை நிறுவியது.
அதிகரித்த பதற்றம்
இந்நிலையில் இரு நாடுகளும் புத்த மதத்தை பின்பற்றினாலும் புத்தரின் அவதாரமாக ஹிந்து கடவுள் விஷ்ணுவைக் கருதுகின்றனர்.

இது தொடர்பான வழக்கில், 1962ல் தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம் இந்த சிலை உள்ள பகுதியை கம்போடியாவுக்கு சொந்தமானதாக அறிவித்தது.
எனினும் இந்த தீர்ப்பை தாய்லாந்து ஏற்க மறுத்து வருகிறது.
இந்நிலையில், 29 அடி உயரமான இந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து இராணுவத்தினர் தற்போது இடித்து அகற்றியுள்ளனர்.
இதனால் இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

