எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக கதைக்களம் செல்கிறது.
வில்லனை வீட்டைவிட்டு தெறிக்க விட்ட பெண்கள் அடுத்து வாழ்க்கையில் சாதிப்பார்கள் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனனி தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன் என்னென்னமோ பிரச்சனைகள் கொடுத்து அவர்களை வளர விடாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறார்.
வண்டி, பண பிரச்சனை என தொடர்ந்து கொடுத்துக்கொண்டே வருகிறார்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், தொழில் திறப்பு நாளும் வந்துவிட்டது, வீட்டில் எல்லா வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் பார்த்தால் தொழில் தொடங்க ஏற்பாடு செய்த இட உரிமையாளர் இப்போது இடம் தர முடியாது என கூறுவது போல் தெரிகிறது.

ஜனனி திறப்பு விழா என எல்லாருக்கும் தெரியும், இப்படி கடைசி நிமிடத்தில் வந்து கொடுக்க முடியாது என்று கூறினால் என்ன செய்வோம் என கோபமாக கேட்கிறார்.
இதில் குணசேகரன் செய்த வேலை என்ன, ஜனனி பிரச்சனையை சரி செய்தாரா இல்லையா என்பதை இன்று காண்போம்.