அய்யனார் துணை
அய்யனார் துணை சீரியலில் இப்போது 2 விஷயம் நடந்து வருகிறது.
ஒன்று, பாண்டியன் வேலை செய்துவந்த கடையை அனைவரின் உதவியுடன் வாங்குகிறார், அதனை குடும்பமே ஒன்றாக கொண்டாடுகிறார்கள்.
இன்னொரு பக்கம் பணத்தை திருட முயன்று நிலாவிடம் சிக்கிய பல்லவன் அம்மா இரவோடு இரவாக எங்கேயோ சென்றுவிட்டார்.

திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்…. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
அவர் எங்கே போனார், என்ன ஆனார் என்பது தெரியாமல் பல்லவன் மிகவும் வருத்தத்தில் உள்ளார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், ஓனரிடம் பணம் கொடுத்த கையோடு அனைவரும் குடும்பமாக ஒரு ஹோட்டல் சென்று சாப்பிடுகிறார்கள்.
அங்கு கலகலப்பாக பேசிக்கொண்டு சாப்பிட பல்லவன் மட்டும் தனது அம்மா நினைத்து வருத்தமாகவே உள்ளார்.

அந்த நேரத்தில் நிலா நடேசனுக்கு சாப்பாடு வாங்க, என் அம்மா காணாமல் போனதே அவரால் தான் அவருக்கு சாப்பாடு வாங்க வேண்டுமா என பல்லவன் கோபப்பட நிலா சமாதானம் செய்கிறார்.
வீட்டிற்கு வந்த நிலா, நடேசனுக்கு சாப்பாடு கொண்டு சென்றதை பார்த்த பல்லவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பின் நிலாவிடம், நாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் அவரால் கஷ்டப்பட்டுள்ளோம்.

நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன், நீங்கள் நியாயமாக என் பக்கம் தான் இருக்க வேண்டும், அவர் பக்கம் இருக்கிறீர்கள். இதெல்லாம் நியாயமே இல்லை, உங்களுக்கு என் மீது பாசமே இல்லை என பேசுகிறார்.

