வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (25.04.2024) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1000 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும்
இவை விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா போன்ற
கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளின்
பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://tamilwin.com/article/man-arrested-with-ganja-in-vavuniya-1714055144

