முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதிய திட்டம்: மேலும் பல நாடுகளுக்கு இலவச விசா

ஏப்ரல் மாதத்தின் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 121500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே (Diana Gamage) தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏழு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ஊடகப் பிரிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இலவச விசா 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ”67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.

இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதிய திட்டம்: மேலும் பல நாடுகளுக்கு இலவச விசா | Sl Provide Free Visa To More Countries For Tourism

அத்துடன் ஏற்கனவே ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்கப்படுகின்றது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வலையொளித்தளங்கள் (You Tube)  ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் போதிலும் சில சுற்றுலாப் பயணிகள் துன்புறுத்தல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

வேறு அமைச்சுக்களின் கீழ் 

ஒடிசி தொடருந்து கண்டியிலிருந்து எல்ல வரையிலான பயணத்திற்கு 3000 ரூபா அறவீடு செய்யப்பட்ட போதிலும் சில தொடருந்து திணைக்கள அதிகாரிகள் 8000 ரூபா வரையில் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அறவீடு செய்கின்றனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதிய திட்டம்: மேலும் பல நாடுகளுக்கு இலவச விசா | Sl Provide Free Visa To More Countries For Tourism

பின்னவல யானைகள் சரணாலயம், சிகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகள் வேறு அமைச்சுக்களின் கீழ் இயங்கி வருகின்றன.

இவற்றை சுற்றுலா அமைச்சின் கீழ் கண்காணிப்பதற்கு முடியாத நிலைமை உருவாகியுள்ளது” என அவர் தெரிவித்தார்.

Source: https://ibctamil.com/article/sl-provide-free-visa-to-more-countries-for-tourism-1714457661

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்