முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோட்டாபய கைது செய்யப்படுவாரா? – பரவும் தகவல்களுக்கு அமைச்சர் பதில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வதந்தியானவை. எவரையும் கைது செய்வது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முறையான சாட்சியங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாவதுடன், தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது. எனினும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் அவருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்த விபரங்கள் தற்போதைக்கு என்னிடம் இல்லை.

ஒரு குற்றவியல் விசாரணை முறையான திசையில் நகரும் போது, அந்த உண்மைகள் தங்களை நோக்கி வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே சிலர் இவ்வாறு பதற்றமடைந்து நீதிமன்றத்தை நாடக்கூடும். அரசாங்கம் எவ்வித அரசியல் பழிவாங்கல்களையும் செய்யாது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திரட்டும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலத்தில் காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது போன்ற பகுதிகளுக்கு வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஓட்டுநர், தற்போது இந்த விசாரணைகள் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளமை மற்றும் தனக்கு உரிய சாட்சிப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்தும் இதன் போது அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், முக்கிய சாட்சிகளைப் பாதுகாப்பதில் நாட்டின் பாதுகாப்புப் பிரிவினர் எப்போதும் தீவிர அவதானத்துடன் செயல்பட்டு வருகின்றனர். குறித்த நபரால் ஊடகங்கள் வாயிலாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் விபரங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு தான் உடனடியாகக் கொண்டு செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Source: https://samugammedia.com/will-gotabaya-be-arrested–minister-responds-to-circulating-rumors-1781665610

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.