முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சஜித் அரசில் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும்: எம்.பி திட்டவட்டம்

தமது அரசில், கொழும்பில் (Colombo) இருக்கும் மிகவும் ஆடம்பரமான ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகமாக மாற்றுவேன் என சஜித் பிரேமதாச (Sajit Premadasa) உறுதியளித்துள்ளார்.

குறித்த விடயத்தினை, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் (H.H.M. Harees) பொத்துவிலில் (Pottuvil) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அங்கு
தொடர்ந்தும் உரையாற்றுகையில், “இந்த மண்ணில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின்
விளையாட்டுகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு பொத்துவில் மண்ணுக்கான நிரந்தர
தீர்வை பெற வேண்டுமானால் எம்முடைய தாகமாக இருக்கின்ற பொத்துவில் வலய
கல்வி பணிமனையை எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதியாக மாறுகின்ற பொழுது சஜித் பிரேமதாச
நிச்சயமாக உருவாக்கி தருவார்.

வர்த்தமானி விவகாரம்

அதே போன்று பொய் கூறி தெரிகின்ற முகுது மகா
விகாரை வர்த்தமானி விவகாரம் நூற்றுக்கு 200 வீதம் பொய். பொத்துவில் மண்ணை
சிறைப்பிடித்து விட்டு நம் மண்ணில் பொய் கூறி திரிகின்றார்கள்.

சஜித் அரசில் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும்: எம்.பி திட்டவட்டம் | Sajith Plans To Turn President House To University

எல்லா
பிரச்சினைகளுக்கும் தீர்வை சஜித் ஜனாதிபதியானதும் பெற்றுத்தருவார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் பதவியில் இருக்கின்ற அந்த ஐந்து
வருடத்தில் ஐந்து கோடி ரூபாய் பெறுமதியான வாகன உறுதி பத்திரம் கொடுப்பார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) அந்த உறுதி பத்திரத்தை கடந்த இரண்டு
மாதங்களுக்கு முன் கொடுப்பதற்கு அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்து
இருந்தார்.

ஆளும் கட்சி

அப்பொழுது அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. வாகன உறுதி
பத்திரத்தை ஆளும் கட்சி மற்றும் எதிர்சட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேட்டிருக்கின்றார்கள்.

சஜித் அரசில் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும்: எம்.பி திட்டவட்டம் | Sajith Plans To Turn President House To University

இது
சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு ஒப்புதல் வழங்குகின்ற போதுதான்
தீர்மானம் எடுக்க முடியும் என்று அமைச்சரவை தீர்மானித்த பொழுது எங்களுடைய
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு அவருடைய கட்சியில் இருக்கின்ற
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல அழுத்தங்களை கொடுத்தனர்.

எனினும்,  அந்த
அழுத்தத்திற்கு அடிபணியாமல் இந்த வாகன உறுதிப்பத்திரத்திற்கு நான் ஒப்புதல் வழங்க
மாட்டேன் என்ற தீர்மானத்தை எடுத்தவர் தான் எங்கள் ஜனாதிபதி வேட்பாளர்
சஜித் பிரேமதாச” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.