தெற்கு காசாவின் (Gaza) – ரபா (Rafah) நகரில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பிணைக்கைதிகள் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் (Israel) – ஹமாஸ் (Hamas) போர் 10 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் நிலையில், போரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
பிணைக்கைதிகள்
சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாக கடந்த ஆண்டு நவம்பரில் ஒருவார காலம் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதற்கு ஈடாக ஹமாசிடம் இருந்த 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்களில் 5 வயதிற்கு உட்பட்ட 2 குழந்தைகளும் காணப்படுவதுடன், ஏற்கனவே 33 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் 6 பிணைக்கைதிகள் கொல்லப்பட்ட சுரங்கப்பாதையின் காணொளியை இஸ்ரேல் ராணுவம் வெயிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.