ஐபிஎல் 2025 ஆம் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) விளையாடுவாரா என்ற கேள்வி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது சிஎஸ்கே போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை மேலும் கவலை அடைய செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பதிவு ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Major Missing எனக் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த பதிவில் தோனியின் சீருடை மற்றும் தோனி களத்தில் இருப்பது போன்றதொரு புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.
பலதரப்பட்ட கேள்வி
இந்தநிலையில், மகேந்திரசிங் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறவுள்ளாரா? எனக் கேள்வி எழுந்துள்ளதுடன் குறித்த பதிவு இரசிகர்களிடையே பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/ipl-2025-csk-tweet-about-ms-dhoni-retirement-1726045638

