உக்ரைன்(ukraine) மீது ரஷ்யா(russia) நடத்திய மிலேச்சத்தனமான ஏவுகணை தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டதுடன் 200 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
உக்ரைனின் கிழக்கு நகரமான பொல்டாவா(Poltava) மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா(Olena Zelenska) தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையை பறிக்கும் ரஷ்யா
இந்த தாக்குதலை “சோகம்” என்று விபரித்த அவர், “எப்பொழுதும் எங்களிடம் இருந்து மிகவும் மதிப்புமிக்க விஷயத்தை – வாழ்க்கையை ரஷ்யா பறித்துக் கொண்டுவருகிறது” என்று குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலை அடுத்து பொல்டாவாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக பிராந்திய ஆளுநர் பிலிப் ப்ரோனின்(Philip Pronin) தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை
நாளை(04) முதல், இப்பகுதியில் கொல்லப்பட்ட 47 பேருக்கும் கூட்டாக துக்கம் அனுஷ்டிக்கப்படும். இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதுடன், 206 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை இஸ்கண்டர்-எம்(Iskander-M) ஆகும் – இது 500 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய ஒரு பாலிஸ்டிக் ஆயுதம்.
இந்த ஏவுகணை 700 கிலோ எடையுள்ள உயர் வெடிகுண்டுகளை சுமந்து செல்லக்கூடியது, 10 மீட்டர் முதல் 30 மீட்டர் வரை துல்லியம் மற்றும் கணிசமான அழிவை ஏற்படுத்தக்கூடியது.
பாரிய அழிவு
இரண்டு ஏவுகணைகள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி( Zelensky) தெரிவித்தார்.
ஏவுகணைகள் “கல்வி நிறுவனம் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனை வளாகத்தை” தாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
https://www.youtube.com/embed/ovL7Nzn-vmM