முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எரிபொருள் நெருக்கடி: அரச வைத்தியசாலை நோயாளர்கள் குறித்து திடீர் தீர்மானம்

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் மருந்துகளை இனி ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் நோக்கில், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்க முடியும்

சுகாதார அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நோயாளர்கள் அடிக்கடி வைத்தியசாலைக்கு வருவதைத் தவிர்ப்பதன் மூலம் அவர்களின் எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போதிய மருந்து கையிருப்பு உள்ள மருத்துவமனைகளின் இந்த வாரம் முதலே இரண்டு மாதங்களுக்குத் தேவையான மருந்துகளை நோயாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

எரிபொருள் நெருக்கடி: அரச வைத்தியசாலை நோயாளர்கள் குறித்து திடீர் தீர்மானம் | Decides To Provide Medicines For 2 Months

மருந்து தட்டுப்பாடு நிலவும் வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துகளை சுகாதார அமைச்சு உடனடியாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் கூறும் விடயம்

இது தொடர்பில் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி கூறுகையில்,

நோயாளர்கள் இரண்டு மாதங்களுக்குத் தேவையான மருந்துகளை ஒரே நேரத்தில் பெற்றுக்கொண்ட போதிலும், அவர்களுக்கு ஏதேனும் திடீர் உடல்நலக் குறைவு அல்லது அவசர நிலை ஏற்பட்டால், அவர்கள் எந்நேரமும் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் சுகாதார சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/decides-to-provide-medicines-for-2-months-1774256294

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.