முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

24 மணிநேரத்தில் உயர்ந்த டெங்கு தொற்றாளர்கள் – உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும்! அவசர எச்சரிக்கை

கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையில் 1,069 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

இந்தத் தொற்றுக்களுடன் இந்த வருடத்தினால் டெங்கு தொற்றினால் பதிவான மொத்த நோயாளர்களது எண்ணிக்கை 47,179 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய (21) நிலவரப்படி இந்த ஆண்டில் டெங்கு நோய் தொடர்பாக 28 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் கபில கன்னங்கர கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், 

தொற்றுநோய் பரவல் இல்லாத காலங்களில் தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை சராசரியாக 150 முதல் 200 வரை இருக்கும் நிலையில், தற்போதைய பரவல் நிலை காரணமாக அந்த எண்ணிக்கை 600 முதல் 650 வரை உயர்ந்துள்ளதாகவும், அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

வைத்தியசாலைகளில் கொள்ளளவு ஏற்கனவே முழுமையாக நிரம்பிவிட்டதாகவும், நோய்த்தொற்றின் பரவல் இதே வேகத்தில் தொடர்ந்தால் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் சீர்குலையும் அபாயம் உள்ளது.

நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் கடும் மன மற்றும் உடல் ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இத்தகைய அழுத்தமான சூழல் காரணமாக வரும் வாரங்களில் டெங்கு தொடர்பான உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும்.

எனவே, தங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Source: https://samugammedia.com/high-number-of-dengue-cases-in-24-hours–deaths-may-increase-urgent-warning-1782116589

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.