வவுனியாவில் 5 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர்
தெரிவித்துள்ளனர்.
நாடு பூராகவும் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வவுனியாவில்
டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
5 டெங்கு நோயாளர்கள்
ஆயினும் ஏனைய மாவட்டங்களுடன்
ஒப்பிடும் போது வவுனியா மாவட்டத்தில் டெங்கு தொற்று குறைவாகவே காணப்படுகின்றது.

அந்த வகையில் வவுனியாவில் 5 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக டெங்கு பெருக்கம் இடங்களை அழிக்குமாறும்,
சுற்று சூழலை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்குமாறும் சுகாதார
பிரிவினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
Source: https://tamilwin.com/article/5-people-infected-with-dengue-in-vavuniya-1782099687

