இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 1,417 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட(Indika Hapugoda) இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“வருடாந்தம் சுமார் 1000 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.
வீதி விபத்துகள்
ஒவ்வொரு ஆண்டும் 3,000 க்கும் மேற்பட்ட வீதி விபத்துகள் நடக்கின்றன.இடம்பெறும் விபத்துகளில் மூன்றில் ஒன்று மோட்டார் சைக்கிள் விபத்தாக உள்ளது.
ஆனால் 2023 இல் வீதி விபத்துகள் குறைந்துள்ளன.
2024 ஜனவரி 1 முதல் ஒகஸ்ட் 10 வரை, 1,352 ஆபத்தான வீதி விபத்துகளில், 1,417 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடம் 328 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
ஒவ்வொரு 10 வருடங்களிலும் 30,000 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் விபத்துக்களில் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன” என்றார்.