அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
குறித்த விமானம், புறப்பட்டு சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.
யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையத்திலிருந்து ஆறு பயணிகளுடன் புறப்பட்ட செஸ்னா 441 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அடையாளம் காணும் செயன்முறை
இதனையடுத்து, உடனடியாக மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் அடையாளம் காணும் செயன்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source: https://tamilwin.com/article/plane-crashes-shortly-after-takeoff-in-us-1751311821

