வவுனியா, கல்மடு 01ம் படிவம் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த முன்னாள் போராளிக்கு புதிய வீடு ஒன்று கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த குடும்பத்தின் கணவர் அங்கவீனம் அடைந்த முன்னாள் போராளியாக இருப்பதோடு, இக்குடும்பத்தின் மற்றுமொரு அங்கத்தவர் முன்னாள் போராளியாக இருந்து காணாமல் ஆக்கப்பட்டவராவாராவார்.
எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற சூழலில் வாழ்ந்து வந்த இக்குடும்பத்தின் துயரம் அறிந்து, அவர்களுக்கு நிரந்தர வாழ்விடத்தை அமைத்துக்கொடுக்க நடவடிக்கையினை தமிழ் நிலம் மக்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த வீட்டினை இன்றையதினம் தமிழ் நில மக்கள் அமைப்பின்’ தலைவர் வி.வினோகரனால் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த வீட்டிற்கான நிதியினை, லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘தமிழர்களுக்கான உதவும்கரங்கள்’ அமைப்பின் தலைவர் யோகி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/a-new-house-for-a-former-fighters-family-in-vavuniya-1782646715

