திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (02.07.2026) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் ,வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப் உட்பட ஈச்சிலம்பற்று பிரதேச சபை தவிசாளர், முப்படைகளின் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வன இலாகா திணைக்களம் ஊடாக எல்லையிடப்பட்ட காணிப் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் பிரதேச மக்களின் பொது விடயங்கள் தொடர்பிலும் விரிவாக இங்கு கலந்துரையாடப்பட்டன.
மேலும் பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் மூலமாக எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
பிரதேச உட்கட்டமைப்பு வீதி அபிவிருத்தி ,கல்வி சுகாதார அபிவிருத்திகளை இலக்காக கொண்ட விடயங்கள் தொடர்பிலும் பொதுவாக கலந்துரையாடப்பட்டன.
Source: https://samugammedia.com/verugal-divisional-coordinating-committee-meeting-1782992589

