இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் மொத்த சுற்றுலாப் பயணிகளில் 21.6 சதவீதமானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 99,955 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுற்றுலாப் பயணிகள்
அதன்படி, இந்தியாவிலிருந்து 21,607 பேர் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பிரித்தானியாவில் (UK) இருந்து 7,496 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் (Germany) இருந்து 6,651 பேரும், சீனாவில் (China) இருந்து ஆறாயிரத்து 640 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 14 இலட்சத்து 62 ஆயிரத்து 623 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.