தமிழ்ப் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனின் நாளைய பயண ஒழுங்கு தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை (24) காலை 10:45 மணிக்கு கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளினுடனான கூட்டம் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டம் நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கும் சங்கிலியன் மந்திரி மனைக்கும் அருகாமையில் உள்ள திவ்ய ஜீவன மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன் அதில் பொதுவேட்பாளர் கலந்துகொள்ளவுள்ளார்.
தொடர் பிரசாரப்பயணம்
இதன் பின்னர், பகல் 12:30 மணிக்கு புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் நடத்தப்படவுள்ள பொதுக்கூட்டத்திற்கு செல்லவுள்ளார்.
“நமக்கு நாமே” தொடர் பிரசாரப்பயணம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் (Jaffna) – சக்கோட்டை, கொடிமுனையில் இருந்து ஆரம்பமாகி பொலிகண்டியில் இருந்து ஆரம்பித்து காங்கேசன் துறையில் நிறைவடைந்தது.
இந்நிலையில், நாளைய தினம் மாலை 3.00 மணிக்கு அத்தொடர் பிரசாரப்பயணம் காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் நோக்கி நகரவுள்ளதுடன் அப்பயணத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளர் கலந்து கொள்ளவுள்ளார்.