மொரட்டுவை (Moratuwa), இந்திபெத்த பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக் கொண்டுள்ளாதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (21.12.2024 இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறித்த நபர் நேற்று மதியம் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு பின்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
முதற்கட்ட விசாரணை
காயமடைந்த பெண், பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்கு முன்னர் குறித்த நபர் , அயல் வீட்டில் இருந்த நபரொருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த அவர், கொழும்பு (Colombo) தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறிது காலமாக நிலவி வந்த தகராறே இந்த தாக்குதலுக்கு காரணமென காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.