பிக் பாஸ் 8ம் சீசன் நிறைவடைய இன்னும் 4 வாரங்கள் மட்டுமே இருக்கிறது.
இன்றைய எபிசோடில் நடிகர் ரஞ்சித் எலிமினேட் ஆனதாக கார்டை காட்டி அறிவித்தார் விஜய் சேதுபதி. ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன் அவரை அழைத்து செல்ல ஷோவுக்கு வந்திருந்தார்.
“உங்களை திரையில் தான் பார்த்திருக்கிறேன், நேரில் இப்போது தான் பார்க்கிறேன்” என பிரியா ராமனிடம் கூறினார் விஜய் சேதுபதி. அதன் பின் ரஞ்சித்தை வர வைத்து அவரது பயண வீடியோவை போட்டு காட்டினார் விஜய் சேதுபதி.
ஒல்லியான ரஞ்சித்
உள்ளே போன ரஞ்சித் தற்போது ஒல்லியாகி பாதியாக வந்திருக்கிறார் என விஜய் சேதுபதி மேடையிலேயே கூற, பிரியா ராமனும் ஆமாம் என கூறுகிறார்.
அவர் இப்படியே இருக்க வேண்டும், மீண்டும் வெயிட் போட்டுவிட கூடாது எனவும் பிரியா ராமன் அப்போது கூறுகிறார்.
‘அவரு இன்னும் வீட்டுக்கு கூட இன்னும் வரல, இருங்க..’ என சொல்லி விஜய் சேதுபதி அவரை கிண்டல் செய்தார்.
அதன் பின் ரஞ்சித் தனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என கூறிவிட்டு பிரியா ராமன் உடன் ஜோடியாக செட்டில் இருந்து கிளம்பிவிட்டார்.