2023 ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் (GCE Ordinary Level Exam) நேற்று நள்ளிரவு (29.9.2024) வெளியாகியுள்ளது.
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம், காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி மல்ஷா குமாரதுங்க, நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளில் முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே உள்ளார்.
பரீட்சையை எதிர்கொண்டு வெற்றி
மற்றைய ஒன்பது பேரும் மாணவிகள் என்பது சிறப்பம்சமாகும். அந்த 10 பேரில் மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சகுன சதீஷன் சமரவிக்ரம அந்த மாணவர் ஆவார்.
சகுன பாடசாலை மாணவர் தலைவராகவும், கேடட் அணி மற்றும் சாரணர் குழுவில் உறுப்பினராகவும், பாடசாலை நடனக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு, சாதாரண தரப் பரீட்சை தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.
எனினும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், உறுதியாக இருந்த சகுன, பரீட்சைக்கு முந்தைய நாள் வீட்டுக்கு சென்று பரீட்சையை எதிர்கொண்டு வெற்றியீட்டியுள்ளார்.
நோய் நிலையிலும் பரீட்சையை எழுதி சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ள சகுன சதீஷன் சமரவிக்ரம, பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சாதனை
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் (29) இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால்
வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (ச/த) பரீட்சை – 2023 (2024) பெறுபேறுகளின் படி
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) வரலாற்றில் முதற் தடவையாக
“26” மாணவிகள் அனைத்து பாடங்களிலும் 9A அதி திறமை சித்திகளை பெற்று வரலாற்று
சாதனை படைத்துள்ளது.
8AB உள்ளடங்கலாக “33” மாணவிகளும், 8AC உள்ளடங்கலாக
“07” மாணவிகளும் அதி திறமைச் சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை
சேர்த்துள்ளனர்.