திருகோணமலை இந்துக் கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரிக்கும் இடையிலான விவாத அரங்கு (03)மாலை திருகோணமலை கோனேஸ்வரா இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.செய்யறிவு மனித வாழ்வை மேம்படுத்துமா? மேம்படுத்தாதா? எனும் தலைப்பில் விவாதம் இரு மணி நேரம் இடம்பெற்றது.
மனிதர்களுடைய வாழ்வில் செய்யறிவு மனித வாழ்வில் தடையாக இருக்கும் என விவாதித்து நடுவர்களின் தீர்ப்பின் பிரகாரம் இந்துக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றார்கள்.இவர்களுக்கான பரிசினை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
இதன் போது அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் செய்யறிவு தொடர்பிலான நன்மை தீமைகள் தொடர்பிலும் செயற்படுவது பற்றிய விளக்கமாக உரையாற்றியதுடன் மாணவர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
Source: https://samugammedia.com/trincomalee-hindu-college-wins-the-debate-competition-1783167070

