முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிக்குளத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்: துரத்திப் பிடித்த இளைஞர்கள்

வவுனியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட வெளிக்குளம் பகுதியில், நேற்றயதினம்  இரவு டிப்பர் வாகனம் ஒன்றின் மூலம் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்ட கட்டிட இடிபாட்டுக் குப்பைகள் மற்றும் மரக்கழிவுகள், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினரின் துரித நடவடிக்கையால் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன.

வெளிக்குளம் பகுதி வயல் கரையோரங்களைச் சூழவுள்ள இயற்கையான சூழலில் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றிரவு டிப்பர் வாகனம் மூலம் பெருமளவிலான கட்டிட இடிபாட்டுக் குப்பைகளும் மரக்கழிவுகளும் கொட்டப்பட்டன.

இதனை அவதானித்த அப்பகுதி கிராமத்து இளைஞர்கள் உடனடியாகச் செயற்பட்டு, குப்பைகளைக் கொட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற டிப்பர் வாகனத்தை சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

இது குறித்து வவுனியா மாநகர சபை உறுப்பினர் அருணனுக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர சபை உறுப்பினர் அருணன், சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்களைக் கடுமையாக எச்சரித்தார்.

கொட்டப்பட்ட குப்பைகளை, அதற்குக் காரணமானவர்களைக் கொண்டே அதே இடத்தில் உடனடியாக முழுமையாக அகற்ற வைத்தார். அத்துடன், இனிவரும் காலங்களில் இவ்வாறான சூழல் மாசடைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்ட ரீதியான கடுமையான சட்டநடவடிக்கைக்கு எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்து அனுப்பினார். 

Source: https://samugammedia.com/trash-dumped-in-the-outdoor-bath-youngsters-chased-and-caught-1783412466

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்