டூரிஸ்ட் பேமிலி
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி.

இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே அனைவரிடம் இருந்தும் பாராட்டுகளை பெற்றுள்ளார். குறிப்பாக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களது பாராட்டுகளை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்
இந்த நிலையில், சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சிம்பு இருவரும் பார்த்துள்ளனர். படத்தை பார்த்துவிட்டு உடனடியாக இருவரும் படத்தின் இயக்குநருக்கு போன் கால் போட்டு பேசியுள்ளனர்.
தங்களது பாராட்டுகளை தெரிவித்தது மட்டுமின்றி கதை இருந்தால் கூறுங்கள், இணைந்து பணிபுரியலாம் என்றும் கூறியுள்ளனர்.


45 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க அதிக சம்பளம் வாங்கும் தீபிகா படுகோன்.. எவ்வளவு தெரியுமா
முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனுஷ் மற்றும் சிம்பு போன்ற முன்னணி நட்சத்திரங்களிடம் இருந்து ஆஃபர் கிடைத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் அடுத்த படம் யாருடன் என்று.

