ரெட்ரோ
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ.

இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


நாளுக்கு நாள் அதிகரிக்கும் டூரிஸ்ட் பேமிலி வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் கிடைக்கவில்லை என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
வசூல்
இந்த நிலையில் 14 நாட்களில் ரெட்ரோ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 14 நாட்களில் இப்படம் ரூ. 100 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளது.


