முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லண்டன் மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் படைத்த உலகசாதனை

லண்டனில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் செபஸ்டியன் சாவே பந்தய தூரத்தை 1 மணி நேரம் 59 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனை படைத்து அனைவரையும் அசத்தி உள்ளார்.

இந்த போட்டியில் கென்யாவின் செபஸ்டியன் சாவே போட்டி தூரத்தை (42.2 கிமீ) முதலில் கடந்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் 1 மணி நேரம் 59 நிமிடங்கள் 30 வினாடிகள் ஆகும். இது புதிய உலக சாதனையாகும். அதாவது மாரத்தான் உலகில் 2 மணி நேரத்திற்கும் குறைவாக எந்த ஒரு வீரரும் போட்டி தூரத்தை கடந்தது இல்லை என்ற தடையை அவர் உடைத்துள்ளார். 

முறியடிக்கப்பட்ட உலகசாதனை

 இதன் மூலம் 2023ல் சிகாகோவில் கென்யாவின் மறைந்த கெல்வின் கிப்டம் படைத்திருந்த 2 மணி நேரம் 35 வினாடிகள் என்ற உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார். அதாவது வெறும் 65 வினாடிகள் நேரம் முன்பாக போட்டி தூரத்தை கடந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

லண்டன் மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் படைத்த உலகசாதனை | London Marathon Kenya Sebastian New World Record

உகாண்டாவின் யோமிப் கெஜலிச்சா 1 மணி நேரம் 59 நிமிடங்கள் 41 வினாடிகளில் கடந்து 2வது இடத்தை பிடித்தார்.

புதிய உலக சாதனையை படைத்து இருக்கும் 29 வயதான செபஸ்டியன் சாவே நடப்பு சாம்பியன் ஆவார்.

மகிழ்ச்சியில் திளைக்கும் வீரர்

தற்போது அவர் படைத்துள்ள புதிய சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

லண்டன் மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் படைத்த உலகசாதனை | London Marathon Kenya Sebastian New World Record

சாதனை குறித்து செபஸ்டியன் சாவே பேசியதாவது; பந்தய தூரத்தில் இலக்கை அடைந்த பின்னர் நேரத்தை பார்த்த பின் நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத நாள் என்று கூறினார்.

போட்டிக்கு முன்னதாக, நிருபர் ஒருவருக்கு பேட்டியளித்த செபஸ்டியன் சாவே, என்றாவது ஒருநாள் 2 மணி நேரத்திற்கு முன்னதாக போட்டியை கடக்கும் ஒரு நபராக நான் இருப்பேன் என்று கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது. 

Source: https://ibctamil.com/article/london-marathon-kenya-sebastian-new-world-record-1777220305

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.