முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை : 313 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம்

இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1373.7 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருடத்தின் முதல் 6 மாதங்களுக்காக (ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதி) நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான இலக்கை விட இது கூடுதலானது என சுங்க ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்க பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

முதல் 6 மாதங்களுக்கு சுங்கத் திணைக்களத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கு 1,060.5 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், திணைக்களம் அந்த இலக்கைத் தாண்டி 313 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.

மோட்டார் வாகன இறக்குமதி

இவ்வருடத்திற்காக சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த வருமான இலக்கு 2,206 பில்லியன் ரூபாயாக உள்ள நிலையில், கடந்த வருடம் ஈட்டப்பட்ட சாதனை அளவிலான 2.5 ட்ரில்லியன் ரூபாய் ஒட்டுமொத்த வருமானத்தையும் இவ்வருடத்தில் தாண்டிச் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை : 313 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம் | Srilanka Customs Revenue Exceeds First Half Target

ஜூலை மாதத்திற்காக சுங்கத் திணைக்களத்திற்கு விதிக்கப்பட்டுள்ள வருமான இலக்கு 192.4 பில்லியன் ரூபாயாகும். இந்தநிலையில் முதல் இரண்டு நாட்களில் மாத்திரம் 31 பில்லியன் ரூபாய் வருமானத்தை சுங்கத் திணைக்களம் ஈட்டியுள்ளது.

எனினும், மோட்டார் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, அத்துறையிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் சற்றுக் குறைவு காணப்படுவதாக சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/srilanka-customs-revenue-exceeds-first-half-target-1783155177

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.