சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களின் இடது கை சிறு விரலில் தோதான குறியீடு இடப்பட்டுள்ளமையால், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 53அ (3) ஆம் பிரிவின் பிரகாரம் 2024.10.26ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச தேர்தலின் போது வாக்காளரின் இடது கைப் பெருவிரலில் தோதான குறியீட்டினால் அடையாளமிடப்படும்.
அறிவிப்பு
வாக்காளரின் இடது கையில் பெருவிரல் இல்லாதிருக்கும் பட்சத்தில், அவரது வலது கையில் உள்ள வேறேதெனுமொரு விரல் தோதான குறியீட்டினால் அடையாளமிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.