முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விலங்குகள் மீதான கொடுமைக்கு கடும் தண்டனை – புதிய சட்ட வரைவு வெளியீடு

விலங்குகளுக்கான சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்துவதுடன், அவற்றின் மீதான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில் புதிய விலங்குகள் நலச் சட்ட வரைவொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

2026 ஜூலை 17ஆம் திகதி சிறப்பு வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த சட்ட வரைவு, விலங்குகளின் நலன் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதுடன், அவற்றிடம் கருணையுடன் நடந்து கொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன்படி, விலங்குகளைத் தாக்குதல், தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்துதல், அளவுக்கு அதிகமாக வேலை வாங்குதல், வேலைக்குத் தகுதியற்ற விலங்குகளைப் பயன்படுத்துதல், வேண்டுமென்றே உணவு, தண்ணீர் அல்லது தங்குமிடம் வழங்காமல் இருத்தல் உள்ளிட்ட செயல்கள் தடை செய்யப்படுகின்றன.

இத்தகைய குற்றங்களுக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அதேவேளை, கொடூரமான முறையில் விலங்குகளைக் கொல்வோருக்கு 5 இலட்சம் ரூபாய் வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் வகையில் சட்ட வரைவு பரிந்துரைக்கிறது.

மேலும், விலங்குகளைக் கைவிடுதல், நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த விலங்குகளைப் பொது இடங்களில் இறக்க விடுதல், சட்டவிரோத கருத்தடை நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தகுதியற்ற நபர்களால் கால்நடை மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல் ஆகியவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

விலங்குகளுக்கு காயம் அல்லது மரணம் ஏற்படக்கூடிய வகையில் விலங்குச் சண்டைகள் மற்றும் வேட்டை நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல், நிர்வகித்தல், ஊக்குவித்தல் அல்லது அதற்கு உதவுதல் ஆகியவையும் தடை செய்யப்படுகின்றன.

விலங்குகளைப் போக்குவரத்து செய்வதற்கும் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, விலங்குகள் தேவையற்ற வலி, துன்பம், காயம் அல்லது ஆபத்துக்கு உள்ளாகாத வகையில் கொண்டு செல்லப்பட வேண்டும்.

இந்த விதிகளை மீறுவோருக்கு 3 இலட்சம் ரூபாய் வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், செல்லப்பிராணி விற்பனை நிலையங்கள் மற்றும் விலங்கு இனப்பெருக்க மையங்களுக்கு உரிமம் வழங்கும் முறையையும் புதிய சட்டம் முன்மொழிகிறது.

Source: https://samugammedia.com/harsh-punishment-for-cruelty-to-animals–new-bill-released-1785126291

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.