இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது இயக்கி வரும் வேட்டுவம். கேங்ஸ்டர் படமாக உருவாகும் இதில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கில் ஸ்டாண்ட் கலைஞர் மோகன் ராஜ் என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது சினிமா துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பா.ரஞ்சித் நிதி உதவி
இறந்த ஸ்டண்ட் நடிகரின் குடும்பத்திற்க்கு இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது 20 லட்சம் ரூபாய் நிதி உதவியை வழங்கி இருக்கிறார்.
ஏற்கனவே நடிகர் சிம்பு மறைந்த மோகன் ராஜ் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


