முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டெங்கு நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நாட்டில் டெங்கு பரவல் நிலைமை மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை பெறுவதற்கான அனுமதி

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போதைக்கு குறித்த தடுப்பூசியை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கோரி, கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. நடப்பு ஜுலைமாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச டெங்கு நோயாளர் எண்ணிக்கையாகும். அதேநேரம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெங்கு நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை | Vaccine For Dengue

டெங்கு நோய்க்கான தடுப்பூசி

தற்போதைக்கு டெங்கு நோய்க்கான தடுப்பூசியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோய் ஏற்படுவதற்கு முன் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதன் மூலம் பாதுகாப்புப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது.

இதுவொரு புதிய தடுப்பூசி என்பதால், நோய் தடுப்பில் இது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்று தற்போது கூறுவது கடினம்.

இருப்பினும், பல நாடுகள் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளன. எனவே, இலங்கைக்கு இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/vaccine-for-dengue-1785209951

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.