முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சி நீச்சல் தடாக புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல்

கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத் தொகுதியின் புனரமைப்புப் பணிகளின் இரண்டாம் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (02.08.2026) நடைபெற்றது.

ரூபா 28 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் நீச்சல் தடாகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்படவுள்ளதுடன், வடமாகாண விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நவீன பயிற்சி வசதிகளும் உருவாக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமாரகமகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

இத்திட்டம் நிறைவடைந்த பின்னர், கிளிநொச்சி மற்றும் வடமாகாணத்தின் விளையாட்டு அபிவிருத்திக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான பயிற்சிகள் மற்றும் போட்டிகளை நடத்துவதற்கான வசதிகளும் மேலும் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில்  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ். முரளிதரன், உதவி மாவட்டச் செயலாளர், பிரதம பொறியியலாளர், Clean Sri Lanka செயலணியின் மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன், அரச அதிகாரிகள், விளையாட்டுத்துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Source: https://samugammedia.com/foundation-laid-for-the-second-phase-of-kilinochchi-swimming-pool-renovation-1785669767

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்