முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மஹர சிறைச்சாலை சம்பவம் இன்று அரச இரசாயனப் பகுப்பாய்வு ஆய்வு

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்று (03) மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, நீதவான் விசாரணை நேற்று (02) இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

மஹர சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து 104 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதற்கமைய, அவர்கள் தும்பர, வெலிகடை, பூசா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையினால் கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்தனர். 

அவர்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறித்த சம்பவத்தின் போது கைதிகளினால் சிறைச்சாலையின் கட்டடங்கள் மற்றும் பெருமளவிலான சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 இம்மோதல் தொடர்பில் தற்போது பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய, மஹர சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் காரணமாக இன்று முதல் 03 நாட்களுக்குக் கைதிகளைப் பார்வையிடுவதை நிறுத்தச் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Source: https://samugammedia.com/mahara-prison-incident-government-analysts-examination-today-1785733479

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்