கடந்த காலங்களில் சட்டவிரோதமாக கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சட்டவிரோதமான முறையில் பல்வேறு நபர்களுக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
போலி கடவுச்சீட்டு
வெளிநாட்டில் இருக்கும் கெஹெல்பத்தர பத்மே என்ற குற்றவாளிக்கு போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.