கொழும்பு, வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் வெளிநாட்டுப் பெண்களை பணியமர்த்திய தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை ரயில் நிலைய வீதி பகுதியில் இயங்கும் விடுதியை நேற்று இரவு பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட 6 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.