களுத்துறை, வரக்காகொட பகுதியில் 8 வயது சிறுமியை இயற்கைக்கு மாறான முறையில் மிக கொடூரமான முறையில் பாலியல் ரீதியான நடத்தைக்கு உட்படுத்திய 15 வயது மாணவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாய் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு சிறுவர்களும் பாதிக்கப்பட்ட சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி பயத்தில் யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை.
சிறுமிக்கு ஏற்பட்ட வலி
இரவில் அவரது தாயார் சிறுமியை குளிக்க வைக்கும் போது சிறுமிக்கு ஏற்பட்ட வலி காரணமாக இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி சிறப்பு பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.