முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்கு புதிய ‘118’ சேவை மையம் அறிமுகம்

பொதுமக்களின் முறைப்பாடுகளை இலகுவாக பெற்றுக்கொண்டு, அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில் ‘118 பொது பாதுகாப்பு சேவை மையம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகளை கையாளும் வகையில் இந்த மையம், பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தலைமையில் அமைச்சின் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் பொதுமக்கள் கட்டணமில்லா 118 அவசர தொலைபேசி இலக்கம் அல்லது 118.pubsec.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகளை இந்த சேவை மூலம் முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பான தகவல்களையும் இந்த தொலைபேசி சேவை ஊடாக வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.அவ்வாறான தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

மேலும், பொது பாதுகாப்பு அமைச்சர் அல்லது பிரதி அமைச்சரின் கவனத்திற்கு நேரடியாக விடயங்களை கொண்டு செல்வதற்கும் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.எனினும், பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Source: https://samugammedia.com/a-new-118-service-center-introduced-for-public-complaints-1785751018

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்