முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மோட்டார் சைக்கிள்களுக்கு தனிப் பாதைகள்: இலங்கையில் புதிய திட்டம் ஆரம்பம்

நாட்டில் மோட்டார் சைக்கிள் தொடர்பான வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்யேகப் பாதைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் முன்னோடி நடவடிக்கை களுவாஞ்சிக்குடியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துகளாக பதிவாகி வருவதாகத் தெரிவித்த அமைச்சர், வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக மோட்டார் சைக்கிள்களுக்கு தனிப் பாதைகளை அமைப்பது அமையும் எனக் கூறினார்.

இலங்கையில் ஆண்டுதோறும் வீதி விபத்துகளில் சுமார் 2,500 பேர் உயிரிழப்பதாகவும், 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 2,750 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2019 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,400 மோட்டார் சைக்கிள் சாரதிகள் மற்றும் பின்னால் பயணித்தவர்கள் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த காலங்களில் மோட்டார் சைக்கிள் விபத்துகளால் சுமார் 9,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், நாட்டில் வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு மோட்டார் சைக்கிள் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னோடி திட்டத்தின் கீழ், களுவாஞ்சிக்குடி பிரதான வீதியின் ஒரு பகுதி மோட்டார் சைக்கிள்களுக்காக மட்டும் ஒதுக்கப்படவுள்ளது.

அப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு அதிகமாக காணப்படுவதைக் கருத்தில் கொண்டு, வழக்கமான வீதி அடையாளங்களுக்கு பதிலாக வீதித் தடுப்புகளைப் பயன்படுத்தி, இந்தப் பாதை ஏனைய வாகனப் பாதைகளிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/separate-lanes-for-motorcycles-new-project-begins-in-sri-lanka-1785822900

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.