கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் சீரற்ற வானிலையினால் பாதிப்புக்களை எதிர்நோக்கினால் அறிவிப்பதற்கு அவசர இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் தடைகள் அல்லது பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர அழைப்பு இலக்கங்களையோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலையால் உயர்தரப் பரீட்சைக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்க்கும் நோக்கில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் பரீட்சைகள் திணைக்களமும் இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றைச் செயற்படுத்தி வருகின்றன.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அனர்த்தங்கள் காரணமாக ஏற்படும் தடைகளை நீக்கி, விரைவாகச் செயற்படுவதற்காக இந்த ஒருங்கிணைப்பு முறைமை பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அவசர இலக்கம்: 117
விசேட கூட்டு அவசர செயற்பாட்டு அறை: 0113 668119, 0113 668026, 0113 668032, 0113 668087, 076 3 117 117
பரீட்சைகள் திணைக்கள அவசர இலக்கம்: 1911
அனர்த்தங்கள் காரணமாகப் பரீட்சைக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் மேற்கண்ட இலக்கங்களுக்கு உடனடியாகத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளையும் ஒருங்கிணைப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Source: https://tamilwin.com/article/special-phone-nos-for-al-exam-students-1786328223

