முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் சிவில் சமூக தளத்தை பாதுகாக்க கலந்துரையாடல்!

இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக அடிப்படையிலான அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் செயற்பாடுகளை பாதிக்கக்கூடிய வகையில் முன்மொழியப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டின் புதிய சட்ட வரைபு தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று (10) திங்கட்கிழமை முல்லைத்தீவு செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

விழுது நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், சிவில் செயற்பாடுகளின் மீது அரசுக்கு அளப்பரிய அதிகாரங்களை வழங்கும் சட்ட வரைபு தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், சட்டத்தின் சாத்தியமான தாக்கங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையில் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான சட்டக் கட்டமைப்புகள் சிவில் சமூக தளத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் மாத்திரமன்றி கிராம மட்டங்களில் செயற்படும் கிராம அபிவிருத்தி சங்கங்கள், சனசமூக நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களும் இச்சட்டத்தின் தாக்கத்திற்கு உட்படக்கூடிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் சமூக அமைப்புக்கள் அரசாங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படுவதன் மூலம் அவற்றின் சுயாதீன செயற்பாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் பங்கேற்பாளர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தை மிகக் குறுகிய காலத்திற்குள், குறிப்பாக 19 நாட்களுக்குள் அமுல்படுத்துவதற்கான அவசரம் ஏன் என கலந்துரையாடலில் கேள்வி எழுப்பப்பட்டது. சட்டத்தை இவ்வாறு அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கான காரணம் என்ன என்பதில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதுடன், இதன் பின்னணியில் சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள் உள்ளனவா என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் முன்மொழியப்பட்டுள்ள சட்டம் தொடர்பான தகவல்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளதால், கிராம மட்டங்களில் உள்ள சாதாரண மக்கள் அதன் உள்ளடக்கத்தையும் தாக்கங்களையும் புரிந்துகொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளையும் எதிர்க்குரல்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றனவா என்ற கேள்வியும் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.

எனினும் சட்டத்தின் உண்மையான நோக்கம் அதன் நடைமுறைப்படுத்தல் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சுயாதீன செயற்பாடுகளின் மீதான தாக்கம் ஆகியவை தொடர்பில் விரிவான பொதுக் கலந்துரையாடல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சட்டத்தரணி குகதாசன் ஜங்கரன் வளவாளராகக் கலந்து கொண்ட இவ்விழிப்புணர்வு கலந்துரையாடலில், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், விசேட தேவையுடைய நபர்கள், கிராம மட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.கவனயீர்ப்பு போராட்டம் !

கிளிநொச்சி மாட்டத்தில் 2018ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்குரிய பணத்தை வழங்க வலியுறுத்தி கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

உமையாள்புரம் பகுதியைச்சேர்ந்த மக்களே குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் கையளித்தனர்.

Source: https://samugammedia.com/discussion-to-protect-civil-society-platform-in-mullaitivu-1786354166

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.