முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அடகு வைத்த நகையை மீட்க சென்றவரை தாக்க முயன்ற உத்தியோகத்தர் –  தமிழர் பகுதியில் சம்பவம்

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் தாக்குவதற்கு முயன்றதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் மட்டக்களப்பு (Batticaloa) – களுவாஞ்சிகுடி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளது.    

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமது தேவைகளுக்காக தம்மிடமிருந்த தங்க ஆபரணங்களை களுவாஞ்சிகுடி பகுதியில்
அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் 19 இலட்சம் ரூபாவுக்கு அடகு
வைத்திருந்தோம்.

நகைகளை தர மறுத்துவிட்டார்கள்

பின்னர் அதனை மீட்பதற்கு வெள்ளிக்கிழமை (03.01.2025) அன்று ஒரு மணியளவில் நாம் பணத்துடன் உரிய நிறுவனத்திற்குச் சென்று வட்டியும் முதலுமாக கணக்குப் பார்த்தபோது 20 இலட்சம் ரூபாய் மொத்த தொகையாக கூறினார்கள்.

அடகு வைத்த நகையை மீட்க சென்றவரை தாக்க முயன்ற உத்தியோகத்தர் -  தமிழர் பகுதியில் சம்பவம் | Officer Attack Who Pawned Gold Jewelery In Banks

நாம் 20 இலட்சம் ரூபாய் காசு கொண்டு வந்துள்ளோம் எமது நகைகளை தருமாறு
கோரினோம். இப்போது உங்களது நகைகள் தர முடியாது ஏன் அவசரமாக மீட்கப்
போகின்றீர்கள் இன்னும் இரு நாட்களுக்கு இருக்கட்டும் திங்கட்கிழமை தருகின்றோம்
என கூறினர்.

இல்லை எமக்கு அவசரமாக எமது ஆபரணங்ளை தேவை, உங்களுடைய வட்டியும்
முதலுமாக கொண்டு வந்திருக்கின்றோம் என கூறியும் அவர்கள் எமது நகைகளை தர
மறுத்துவிட்டார்கள்.

வட்டிக் காசு அதிகரிக்கும் 

பின்னர் நாம் எமது வீட்டிற்கு சென்றுவிட்டோம்.

மீண்டும் அன்றயதினம் 2 மணியளவில் போய் நாம் தங்களிடம் அடகு வைத்த ஆபரணங்களை
மீட்பதற்காக வந்துள்ளோம் எம்மிடமுள்ள நிதியை தாங்கள் பெற்று விட்டு எமது
ஆபரணங்களை தருமாறு கோரியபோதும் அந்த நிதி நிறுவனத்தில் கடமைபுரியும்
உத்தியோகஸ்த்தர் ஒருவர் தகாத வார்த்தைப்பிரயோகம் செய்து எம்மைத் தாக்க
முயன்றார்.

அடகு வைத்த நகையை மீட்க சென்றவரை தாக்க முயன்ற உத்தியோகத்தர் -  தமிழர் பகுதியில் சம்பவம் | Officer Attack Who Pawned Gold Jewelery In Banks

இவ்விடையம் தொடர்பில் நாம் களுவாஞ்சிகுடி பொலிவில் முறைப்பாடு செய்துள்ளோம் என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிதி நிறுவனத்தில் கடையாற்றும் உத்தியோகஸ்த்தர்கள் தமக்கு
மாத்திரமின்றி இன்னும் பல மக்களுக்கு இவ்வாறு செய்துள்ளதாகவும், எம்முடைய தங்க
நகைகள் அவர்களிடத்தில் இன்னும் சில நாட்களுக்கு இருக்குமாக இருந்தால் வட்டிக்
காசு அதிகரிக்கும் என்ன நோக்கத்தியே தான் அவர்கள் இவ்வாறு செய்து வருவதாகவும்
அவர்கள் மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.