முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை.. இரகசிய விமானத்தில் தப்பிச் சென்ற ட்ரம்ப்!

ஈரானின் அச்சுறுத்தல் காரணமாகவே துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் பின்னர், தாம் இரகசியமாக விமானத்தை மாற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

“இரகசிய பிரிவு மற்றும் இராணுவத்தினரின் வழிகாட்டலின்படியே நான் செயற்படுகிறேன், அவர்கள் என்னை வேறு விமானத்தில் பயணிக்குமாறு கேட்டுக்கொண்டனர்” எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், தமது உயிருக்கு வெளியுலகிற்குத் தெரியாத பல அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 8ஆம் திகதி அன்சாரா விமான நிலையத்தில் ஊடகக் கெமராக்களுக்கு முன்னால் ஏர் போர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் ட்ரம்ப் ஏறியுள்ளார். 

ஈரானின் அச்சுறுத்தல்.. 

இருப்பினும், பின்னர் யாருக்கும் தெரியாமல் விமானத்தின் மறுபக்கத்திலிருந்து உணவு விநியோக வாகனத்தின் (Catering Truck) மூலம் இரகசியமாக C-32A என்ற இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 

அமெரிக்க உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை.. இரகசிய விமானத்தில் தப்பிச் சென்ற ட்ரம்ப்! | Trump Confirms Switched Planes Nato Summit

அதேநேரம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் (Pete Hegseth) சாதாரண பயணி போல வெளிப் படிக்கட்டுகள் வழியாக அந்த இராணுவ விமானத்தில் ஏறியுள்ளார்.

ஆனால், ஊடகவியலாளர்களும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களும் ட்ரம்ப், ஏர் போர்ஸ் ஒன் விமானத்திலேயே இருப்பதாக நம்ப வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் விமானத்தின் ஜன்னல் திரைச்சீலைகளை மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

தீவிர பாதுகாப்பு 

புகைப்படக் கலைஞர் ஒருவர் ஜன்னல் திரையைத் திறக்க முயன்றபோது அது உடனடியாகத் தடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை.. இரகசிய விமானத்தில் தப்பிச் சென்ற ட்ரம்ப்! | Trump Confirms Switched Planes Nato Summit

நேட்டோ உச்சிமாநாட்டின் போது ட்ரம்பை இலக்கு வைத்து தோளில் வைத்து இயக்கும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்திருந்த பின்னணியிலேயே இந்த இரகசிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஏமாற்று நடவடிக்கையைத் தொடர்வதற்காக, ஊடகவியலாளர்கள் பயணித்த விமானத்திற்குத் தொடர்ந்து “AF1” என்ற அழைப்புக் குறியீடு (Call sign) பயன்படுத்தப்பட்டதுடன், ட்ரம்ப் பயணித்த C-32A விமானத்திற்கு “Reach 18” என்ற வேறு அழைப்புக் குறியீடு பயன்படுத்தப்பட்டுப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/trump-confirms-switched-planes-nato-summit-1786523584

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.