முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாத சாரதிகள்; யாழில் விழிப்புணர்வு நடவடிக்கைக்கு கோரிக்கை

தீயணைப்பு வாகனங்கள் அவசர சேவைக்காக ஒலி எழுப்பியவாறு பயணிக்கும் போதும், ஏனைய வாகன சாரதிகள் அவற்றுக்கு வழிவிடுவதில்லை என யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறையில் அமைந்துள்ள எரிபொருள் களஞ்சியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை (14) தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி நடைபெற்றது. இதன்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தீ விபத்து ஏற்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து செல்வது அவசியமானதாகும். எனினும், தீயணைப்பு வாகனங்கள் ஒலி எழுப்பியவாறு அவசரமாக பயணிக்கும் போதிலும், வீதியில் செல்லும் ஏனைய வாகன சாரதிகள் அவற்றுக்கு உரிய முறையில் வழிவிடுவதில்லை.

இதனால் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியிலேயே தீயணைப்பு வாகனங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதுடன், சம்பவ இடத்தை சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, தீயணைப்பு வாகனங்களுக்கு எவ்வாறு வழிவிட வேண்டும் என்பது தொடர்பில் வாகன சாரதிகளுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தீ விபத்து அல்லது ஏனைய அனர்த்தங்கள் ஏற்படும் போது பொதுமக்கள் உடனடியாக எவ்வாறு செயற்பட வேண்டும் மற்றும் முதலுதவி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் பயிற்சிகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விபத்து அல்லது அனர்த்தம் ஏற்படும் போது முதலில் சம்பவ இடத்தில் இருப்பவர்களே அதற்கு உடனடியாக பதிலளிக்கக்கூடியவர்களாக இருப்பதால், அவர்களுக்கு உரிய அறிவும் பயிற்சியும் வழங்கப்பட்டிருந்தால் பாரிய அனர்த்தங்களைத் தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Source: https://samugammedia.com/drivers-not-giving-way-to-fire-trucks-call-for-awareness-campaign-in-jaffna-1786704290

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.