முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மண்சரிவால் பாதிக்கப்பட்ட கவரவிள தோட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் அவசியம்

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை-கவரவிள தோட்டத்திற்கு நேரில் சென்று ஆலய மண்டபத்தில் தற்காலிகமாக தங்கியுள்ள மக்களையும்  பாதிப்பிற்கு உள்ளான வீடுகளையும்  பார்வையிட்டிருந்தேன்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் தற்போதைய நிலைமைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அவசரத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்துக்கொண்டேன்.

தொடர்ச்சியாக மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் வாழ்வது தொடர்பில் நீண்டகால தீர்வு அவசியம். எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு கவரவிள தோட்ட முகாமையாளருடன் தொலைப்பேசியில் விடயத்தினை தெரிவித்து, மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை சுற்றியுள்ள மண்மேடுகளை அகற்றுவதற்கும் ஏனைய உதவிகளை தோட்ட நிர்வாகத்தினால் செய்து கொடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தேன்.

அதேபோன்று, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கத்தின் கவனத்திற்கும் இந்த விடயங்களை கொண்டு செல்லப்படும்.

நாம் அரசாங்கத்தில் இருந்தபோதும் மக்களின் தோளோடு தோள் நின்று அவர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தோம். தற்போது எதிர்க்கட்சியில் இருந்தாலும், மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி, அவர்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

Source: https://samugammedia.com/immediate-relief-is-essential-for-the-kavaravila-estate-residents-affected-by-the-landslide-1787115663

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.