முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு மாகாணத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ள
நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று (20) காலை முதல்
முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பு 

அதற்கமைய, மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல்
அலுவலகத்தில் இருந்து காலை முதல் வாக்கு பட்டியல் வாக்களிப்பு
நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகருமான
திருமதி ஜே.ஜஸ்ரீனா முரளிதரன் தலைமையில் இந்த வாக்குப்பட்டிகள் விநியோகம்
செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு | Delivery Ballot Boxes Polling Stations Batticaloa

தேர்தல் கடமைகளுக்காக சுமார் 260 வாகனங்கள் போக்குவரத்துக்காக
பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்
சுமார் 4,49 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட
தெரிவித்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளை காலை 7 மணி தொடக்கம்
மாலை 4 மணி வரை வாக்களிப்பு நடைபெறும் எனவும் பொதுமக்கள் தமது வாக்குகளை உரிய
நேரகாலத்திற்கு சென்று செலுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருகோணமலை 

அதேவேளை, திருகோணமலை தேர்தல் மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளுக்குரிய வாக்குப்
பெட்டிகள் திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இயங்கிவரும் வாக்குப்பெட்டி
பொறுப்பேற்றல் மற்றும் விநியோகித்தல் நிலையத்தில் இருந்து இன்று (20)
வெள்ளிக்கிழமை வாக்களிப்பு நிலையத்தின் சிரேஷ்ட தலைமைதாங்கும் அதிகாரிகளினால்
வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு | Delivery Ballot Boxes Polling Stations Batticaloa

திருகோணமலை தேர்தல்
மாவட்டத்தில் உள்ள திருகோணமலை தேர்தல் தொகுதி, மூதூர் தேர்தல் தொகுதி மற்றும்
சேருவில தேர்தல் தொகுதி ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 318 வாக்களிப்பு
நிலையங்கள் தயார்நிலையில் உள்ளன.

அந்தவகையில், திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை திருகோணமலை தேர்தல் தொகுதியில்
105005 பேரும், மூதூர் தேர்தல் தொகுதியில் 123363 பேரும், சேருவில தேர்தல்
தொகுதியில் 87557 பேருமாக மொத்தம் 315925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தின் வாக்கு எண்ணும் மத்திய நிலையமாக திருகோணமலை
விபுலானந்தா கல்லூரி செயற்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

செய்தி – எப்.முபாரக் 

GalleryGalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/delivery-ballot-boxes-polling-stations-batticaloa-1726814152

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.