கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருகானந்தா கல்லூரிக்கு முன்பாக இயங்கி வந்த தனியார் பதிப்பகம் ஒன்று தீ விபத்தில் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
குறித்த தீ விபத்து நேற்று (06.09.2026) இரவு திடீரென ஏற்பட்டுள்ளது.
இதன்போது பதிப்பகத்தில் இருந்த பெறுமதிமிக்க பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்தினால் பதிப்பக உரிமையாளர் தனது வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

