முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்மணி மனிதப்புதைகுழி : சுயாதீன சர்வதேச விசாரணை கோரும் பிரித்தானிய எம்.பி

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மன் வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டு நாளையுடன் (07) 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை தொடர்பான வழக்கில் வெளிப்பட்ட தகவல்களே செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பது தொடர்பான விசாரணைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

 583 மனித எச்சங்கள் மீட்பு 

இந்தநிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 583 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழி : சுயாதீன சர்வதேச விசாரணை கோரும் பிரித்தானிய எம்.பி | International Investigation About Chemmani Uk Mp

கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையும் அதனைத் தொடர்ந்து வெளிப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைகள் தொடர்பான உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நீண்டகாலமாக பதிலளிக்கப்படாத கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன.

செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.

டி.என்.ஏ பரிசோதனை

மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் எச்சங்கள் தொடர்பான தடயவியல் மற்றும் டி.என்.ஏ பரிசோதனைகளுக்கு சர்வதேச நிபுணத்துவம் தேவைப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் சர்வதேச பங்களிப்பு அவசியம் எனவும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

செம்மணி மனிதப்புதைகுழி : சுயாதீன சர்வதேச விசாரணை கோரும் பிரித்தானிய எம்.பி | International Investigation About Chemmani Uk Mp

எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் வெளிப்படையான, சுயாதீனமான மற்றும் சர்வதேச தரத்திலான விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வரும் உண்மையும் நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும்“ என  தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/international-investigation-about-chemmani-uk-mp-1788674300

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.