முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Gov Pay போலி இணையதளங்கள் மூலம் மோசடி – பொலிஸார் எச்சரிக்கை

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை இணையவழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Gov Pay’ சேவையைப் போன்ற போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் ரகசியத் தகவல்களைத் திருடும் மோசடி தொடர்பில் பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மோசடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போலி இணையதளங்களுக்கான இணைப்புகள் SMS மற்றும் WhatsApp செய்திகள் ஊடாக பொதுமக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அனுப்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இணைப்புகளைச் சொடுக்கும் பயனாளர்களிடம் இருந்து வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்கள் தந்திரமாகப் பெறப்படுவதுடன், அதன் பின்னர் அவர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணமும் மோசடியாகப் பெறப்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சிரமத்தைக் குறைத்து, நிதிப் பரிவர்த்தனைகளை இலகுவாக்கும் நோக்கில் போக்குவரத்து அபராதங்களை இணையவழியில் செலுத்தும் ‘Gov Pay’ நடைமுறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைப் பயன்படுத்தியே மோசடிக் குழுக்கள் பொதுமக்களை இலக்கு வைத்து போலி இணையதளங்களை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘Gov Pay’ சேவையைப் பயன்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமற்ற வேறு எந்த இணையதளமும் அல்லது குறுஞ்செய்தி இணைப்புகளும் கிடையாது என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

எனவே, சந்தேகத்திற்குரிய SMS, WhatsApp செய்திகள் அல்லது இணைய இணைப்புகளைத் திறக்கவோ, அவற்றில் வங்கித் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளைப் பதிவு செய்யவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Source: https://samugammedia.com/fraud-through-fake-gov-pay-websites–police-warning-1788681807

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.